ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். […]
இயற்கை முறையில் கடலை சாகுபடி !
நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் 130 பாத்திகள் வரை எடுக்கலாம். பிறகு, பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலையை விதைக்கவேண்டும் (50 […]
கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !
கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு இலை, தழைகளை (எருக்கன், ஆவாரை போன்றவை) போட்டு உழ வேண்டும். நாற்றுகளை நடவு செய்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். களை எடுத்த 10 நாட்களுக்குள் […]
கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!
கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein – 10.6 கிராம் நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம் கொழுப்பு (எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து)-Fat (ether extr) – 5 தாதுப்பொருள் – Mineral – 2.7% சுண்ணாம்பு சத்து – Calcium – 50 மில்லி […]
மிளகு சாகுபடி
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலும் விருந்துண்ணலாம்” என்கிறது பழமொழி! ஆனால், எங்களது காரமான மிளகு ஐந்து இருந்தாலே போதும் அனைவரின் வீட்டிலும் உணவருந்தலாம்” என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி விவசாயிகள். மலைகளிலும், மலையடிவாரத்திலும் மட்டுமே மிளகுக் கொடி வளரக்கூடியது என்பதனை உடைத்து சமதரையிலும் மிளகுக் கொடியினை வளர்க்கலாம் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தினர். சாதித்த கறம்பக்குடி விவசாயி ’வாசனைப் பயிர் அரசன்’ என்றழைக்கப்படும் மிளகு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத்தான், தமிழகத்தில் […]