கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.
கோவைக்காயின் மருத்துவக் குணம்
கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு நிவாரணம்: கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது. நீரிழிவு : நீரிழிவு நோய்க்கு இது மூலிகை […]
செழிப்பான வருமானம் தரும் செம்பு….
Comments உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறைச்சி போலவே இதை சமைத்துப் பரிமாறும் பழக்கமும் உண்டு. அதனால், எப்போதும் நல்ல தேவை உள்ள காய்கறிகளில் சேப்பக்கிழங்கும் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. […]
முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்
Comments முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சாகுபடி நுட்பங்கள் : நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. […]
காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்
நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுக்கு வெட்டு காய்கறிகளில் காலிஃபிளவரில்தான் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. மேலும் ஒரு கப் […]
பாகல் சாகுபடி செய்யும் முறை !
15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 […]
புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை
ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம். புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு […]
வெண்டை சாகுபடி செய்யும் முறை
வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ […]
இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!
ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும். அசுவினியை […]
முருங்கை சாகுபடி!!!
நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!
இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் […]