கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.
கோவைக்காயின் மருத்துவக் குணம்
கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு நிவாரணம்: கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது. நீரிழிவு : நீரிழிவு நோய்க்கு இது மூலிகை […]
செழிப்பான வருமானம் தரும் செம்பு….
Comments உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறைச்சி போலவே இதை சமைத்துப் பரிமாறும் பழக்கமும் உண்டு. அதனால், எப்போதும் நல்ல தேவை உள்ள காய்கறிகளில் சேப்பக்கிழங்கும் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. […]
முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்
Comments முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சாகுபடி நுட்பங்கள் : நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. […]
இயற்கை முறையில் சாமை சாகுபடி
மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.
சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும்.
இயற்கைமுறையில் மஞ்சள் சாகுபடி
மஞ்சளில் விதை தேர்வு
நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.
புதினா சாகுபடி முறை
புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது. மண் வகைகள் வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும். நீர் மற்றும் உர மேலாண்மை புதினா […]
உளுந்து சாகுபடி
ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். […]
இயற்கை முறையில் கடலை சாகுபடி !
நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் 130 பாத்திகள் வரை எடுக்கலாம். பிறகு, பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலையை விதைக்கவேண்டும் (50 […]
கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !
கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு இலை, தழைகளை (எருக்கன், ஆவாரை போன்றவை) போட்டு உழ வேண்டும். நாற்றுகளை நடவு செய்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். களை எடுத்த 10 நாட்களுக்குள் […]
கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!
கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein – 10.6 கிராம் நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம் கொழுப்பு (எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து)-Fat (ether extr) – 5 தாதுப்பொருள் – Mineral – 2.7% சுண்ணாம்பு சத்து – Calcium – 50 மில்லி […]
மிளகு சாகுபடி
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலும் விருந்துண்ணலாம்” என்கிறது பழமொழி! ஆனால், எங்களது காரமான மிளகு ஐந்து இருந்தாலே போதும் அனைவரின் வீட்டிலும் உணவருந்தலாம்” என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி விவசாயிகள். மலைகளிலும், மலையடிவாரத்திலும் மட்டுமே மிளகுக் கொடி வளரக்கூடியது என்பதனை உடைத்து சமதரையிலும் மிளகுக் கொடியினை வளர்க்கலாம் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தினர். சாதித்த கறம்பக்குடி விவசாயி ’வாசனைப் பயிர் அரசன்’ என்றழைக்கப்படும் மிளகு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத்தான், தமிழகத்தில் […]
காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்
நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுக்கு வெட்டு காய்கறிகளில் காலிஃபிளவரில்தான் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. மேலும் ஒரு கப் […]
பாகல் சாகுபடி செய்யும் முறை !
15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 […]
புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை
ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம். புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு […]
வெண்டை சாகுபடி செய்யும் முறை
வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ […]
இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!
ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும். அசுவினியை […]
இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்
சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தெளிக்க கட்டுப்படுத்தலாம்.
வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்
தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. இவைகள் தென்னை நார் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன.
மரிக்கொழுந்து சாகுபடி
தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, […]
‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்
ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது.
வாழையில் வாடல் நோய்
மேலூர்: வாழையைத் தாக்கும் பனாமா வாடல் நோய் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பொருளாதார சேதத்தை தவிர்க்கலாம் என மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தினர் தெரிவிக்கின்றனர். வாழையில் இலைகள் கருகி, மட்டைகள் முறிந்து வாழை மரத்தில் துணியை சுற்றிக் கட்டிவிட்டது போல காட்சியளிக்கும். முதலில் இலையின் ஓரத்தில் மஞ்சள் நிறாகக் கணப்படும். பின்னர் இலையின் மையப் பகுதி வரை மஞ்சள் நிறாக மாறி, […]
நஷ்டம் இல்லாத ஊடுபயிர் விவசாயம்
முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது. நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர். ஒரே பாசனம் திண்டுக்கல் […]
கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்
கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த வாரம் 2 நாட்கள் லேசான மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர். குறுகிய காலப்பயிரில் கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். குதிரைவாலி பயிரிட கோ 1, கோ (கேவி)2 ஆகியவை ஏற்ற ரகங்கள் […]
நிலக்கடலை மகசூல் அதிகரிக்க…
நிலக்கடலையில் அமோக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என கோபி வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது: நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது, தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு, நல்ல தரம் வாய்ந்த புரதம், தேவையான அளவு சத்துகள் அடங்கிய உணவுப் பொருளாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை சாகுபடி செய்யும்போது அதன் மகசூலை அதிகரிப்பதற்கு ஜிப்சம் உரம் […]
ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே…
Nullam condimentum dictum sapien nec mattis. Praesent at pulvinar sed lorem eu aliquam. Vivamus volutpat ante neque, in pellentesque tortor laoreet ut. Ut a auctor magna. Nullam and vehicula eget metus ac fermentum. Nulla facilisi. Maecenas cur vel sapien consectetur.
முருங்கை சாகுபடி!!!
நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!
இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் […]