உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் சின்ன […]
நினைவாற்றல் தரும் வல்லாரை!
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அமினோ […]
விஷ முறிவாகப் பயன்படும் நாட்டு மருந்து வசம்பு
இந்தியாவிலும் எகிப்திலும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக வசம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டது. செயல்தூண்டுவியாகவும், ஜீரணத்தை சரி செய்து பசியினை தூண்டவும் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் காணப்படும் Acorus gramineus எனும் தாவரம் வசம்பு போன்றே பயன்படுத்தப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: எளிதில் ஆவியாகும் எண்ணெய் அசரோன், சபோனின்கள், அகோரின் மற்றும் பிசின் பொருள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அசரோன் மற்றும் குளுக்கோசைடான் அகோரின் தாவரத்தின் முக்கிய செயல் ஊக்கப் பொருள்களாகும். வயிற்று வலிக்கு மருந்து வசம்பின் தரையடித்தண்டு […]
நோய் பல தீர்க்கும் வேப்பமரம்
தெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. மருத்துவ குணம் நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், […]
விஷக்கடிக்கு மருந்தாகும் துளசி
வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர். 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து. துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் […]
தோல்நோய்களை குணமாக்கும் குன்றுமணி
‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கறுக்காது ” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன. விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், […]
நாயுறுவிச் செடியில் உள்ள மருத்துவப்பயன்கள்
பார்க்கும் இடத்தில் எல்லாம் களைச்செடிபோல சாதாரணமாக முளைத்திருக்கும் நாயுறுவிச் செடியில் பல்வேறு மருத்துவப் பயன்கள் உள்ளன. சாலை ஓரங்கள், பயன்படுத்தாத நிலங்களில் காணப்படும் இந்த தாவரத்தின் உறுப்புகள் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. பெயர்க்காரணம் நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது. இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு. நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது. அந்த வேளையில் இதன் விதைகள் […]
புண்ணியம் தரும் அகத்திக்கீரை!
அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக் கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் […]
தோல்நோய்களை குணமாக்கும் குப்பைமேனி!
சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ஆஸ்துமா குணமடையும் மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை […]
அகத்தை சுத்தமாக்கும் சீரகம்
“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே” என்பது சித்தர் பாடல். இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் […]
உடல் பலத்தை அதிகரிக்கும் மாம்பழம்
‘மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்” என்பது பழமொழி. தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழமும் வரத்தொடங்கிவிடும். உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. இது கடவுளின் கனி என்றும் வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிய சுவையுடன் பலவித சத்துக்களும் மாம்பழத்தைப் பற்றி சில தகவல்கள். வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் மாம்பழத்தில் ஏ, பி, சி […]
சக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்
மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன. முன்னோர் வார்த்தைகள் எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது […]
ரத்தக்கசிவை நீக்கும் அருகம்புல்!
“ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு. இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது. கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும். தெய்வாம்சம் மிக்க புல் வீட்டுத்தோட்டத்தில் அருகம்புல்லை பயிரிடவேண்டும். விநாயகரின் விருப்பத்திற்குரிய அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லை தூர்வாயுக்மம் என்பார்கள். உயிரினங்களின் துன்பங்களைத் தீர்ப்பவர் விநாயகர், மக்களின் எல்லா வகையான […]
இனிப்புத் துளசி (Stevia)
இனிப்புத் துளசி (Stevia) ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. இனிப்புத் துளசியின் முக்கியத்துவம்: மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே […]
அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க…
காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன. கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான […]
பிரா, நோ பிரா: எது நல்லது, எது கெட்டது? ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா…
பெண்கள் மனதில் நீண்ட நாட்களாக நிலைக் கொண்டிருக்கும் பிராப்ளம் இது, பிரா? நோ பிரா? எது நல்லது, எது கெட்டது. பெரும்பாலான இணையங்களில், சமூக தளங்களில் பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகின்றன. பிரா தேர்வில் பெண்கள் செய்யும் தவறுகள், பிரா அணியாமல் இருந்தால் மார்பகங்கள் தொங்கிவிடுமா? இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குங்கள் என பல எண்ணற்ற கருத்துக்கள், ஆரோக்கிய குறிப்புகள் இந்த பிராவை சுற்றி அமைந்திருக்கிறது. சரி! உண்மையில் பிரா அணிவதால் […]
பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!
ஹெமோராய்ட்ஸ் என அழைக்கப்படும் மூல நோய் என்பது ஆசன வாய் பகுதியை சுற்றி ஏற்படும் சிறிய வீக்கங்களாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது வலி உண்டாகும். அதனுடன் சேர்த்து இரத்த கசிவும் ஏற்படும். பொதுவாக நடுத்தர வோதில் தான் மூல நோய் வளர்ச்சி காணப்படும். ஆனால் எதுவும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. நடுத்தர வயதிற்கு முன்பும் பின்பும் மூல நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயுர்வேதம் பெரிதும் கை கொடுக்கிறது. […]
பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் […]
பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!!!
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!! மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக […]
ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வழிகள்
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் […]
காலையில் கற்றாழை ஜூஸ் உடன் ஒருவர் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
நம்மில் பலரது வீடுகளிலும் பொதுவாக வளர்க்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த ஓர் செடி தான் கற்றாழை. பலரும் கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கும். இதனால் தான் இது பல்வேறு ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக் போன்றவற்றில் மட்டுமின்றி, பல்வேறு எடை குறைப்பு மருந்துகள், கொலஸ்ட்ரால் மருந்துகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்தில் கற்றாழையைக் கொண்டு நம் முன்னோர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்கள். ஆயுர்வேத […]
ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை, அதிக செலவில்லாமல் விரட்டலாம்.
குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி. குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர். வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், […]
உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்
உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் தான் பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக் கொள்ளும். இப்படி உடலின் வெப்பம் அதிகரித்தால், அதனால் எப்போதும் நெருப்பில் இருப்பது போன்று உணர்வதோடு, வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும். ஆனால் இந்த உடல் சூட்டைக் குறைப்பதற்கு ஒருசில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றை அன்றாடம் […]