அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம். கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]