அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம். கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]
மாயாஜாலம் நிகழ்த்தும் மசாஜ்!
உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பே ஆலயம் என்றார் திருமூலர். உடலை தினமும் ஆராதித்து பேணுவதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. நம்மில் பலர் ஓயாத வேலைப்பளுவினால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ஏராளமான நோய்களும் உருவாகின்றன. தற்போது மசாஜ் சிகிச்சை முறை மனச்சுமையை நீக்குவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கின்றன. மசாஜ் செய்வதால் உடலும் உள்ளமும் புத்துணர்சி பெறுகின்றன. மாயஜாலம் செய்யும் மசாஜ் பற்றி உடலியக்க நிபுணர்கள் தரும் சில முக்கியத் தகவல்கள் : 1.சருமம்: மசாஜால் […]
கொளுத்துது வெயில் – பத்திரம் தோல்
கத்திரி வெயிலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் சூடு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு தோல் நோய்களும் ஏற்படுவது இயல்பு. காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, […]
சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை […]