மேலூர்: வாழையைத் தாக்கும் பனாமா வாடல் நோய் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பொருளாதார சேதத்தை தவிர்க்கலாம் என மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தினர் தெரிவிக்கின்றனர்.
வாழையில் இலைகள் கருகி, மட்டைகள் முறிந்து வாழை மரத்தில் துணியை சுற்றிக் கட்டிவிட்டது போல காட்சியளிக்கும். முதலில் இலையின் ஓரத்தில் மஞ்சள் நிறாகக் கணப்படும். பின்னர் இலையின் மையப் பகுதி வரை மஞ்சள் நிறாக மாறி, தொடர்ந்து கருகத் தொடங்கும். இதனால், வாழை மட்டைகள் முறிந்து தொங்கும். வாழை கிழங்கை குறுக்கே வெட்டிப் பார்த்தால் உள்பகுதியில் மஞ்சள் செம்பழுப்பு நிறாக காணப்படும்.
மரத்தில் குறுத்து இலை மஞ்சள் நிறாகி விரைப்பாக நிற்கும். வாழை தண்டை வெட்டிப் பார்த்தால் நீர் உறிஞ்சும் திசுக்கள் நிறம் மாறி பூஞ்சானங்கள் நிறைந்திருக்கும். இதை வெடிவாழை நோய், பனாமா வாடல் நோய் என அழைக்கின்றனர்.
பனாமா நோய் தடுப்பு: நேந்திரன், பூவன் ரகங்கள் வாடல் நோய் எதிர்ப்புத் திறனுள்ளவை. ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் பச்சை நாடன் ரகங்களை இந்நோய் எளிதாக தாக்கும். வாழை கன்று பயிரிடும்போது நோய் தாக்காத ஆரோக்கியமான கன்றுகளையே தேர்வு செய்ய வேண்டும். கன்றின் கிழங்குகளை பார்த்து நோய் பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். விதை கிழங்கில் செந்நிற குறிகள் இருப்பதை சீவிவிட வேண்டும். கிழங்கை களிமண் கரைசலில் நனைத்து, குழியில் கார்போபியுரான் குருணை மருந்தை தூவி நடவு செய்தால், நூற்புழு தாக்குதலை தவிர்க்கலாம். மேலும் வாடல் நோய் தாக்குதல் கட்டுப்படும்.
ஒரு ஹெக்டேருக்கு அல்லது குழிக்கு ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் குழிக்கு ஐந்து கிலோ சர்க்கரை ஆலைக் கழிவு இடவேண்டும். அமிலப்பாங்கான நிலத்தில் இந்நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும். எனவே, ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பு மண் இட வேண்டும். வாடல் நோய் காரணி நீண்ட காலம் மண்ணில் தங்கியிருக்கும். சல்லி வேர்கள் வழியாக வாழை மரத்தில் புகுந்துவிடும். மேலும் பாசன நீரின் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. எனவே, மழை காலத்தில் நிலத்தில் நீர் தேங்காமல் நன்கு வடித்துவிட வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறையே சிறப்பானதாகும்.
நோய் பாதித்த பகுதியில் உயிரியல் முறையில் நோய் தடுப்பு. உயிர் கொல்லியான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்கொண்டு வாழைகன்றுக்கு 10 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்யலாம். சூடோமோனாஸ் ப்ளுசன்ஸை ஹெக்டேருக்கு 2.5 கிலோ வீதம் 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து, பத்து பதினைந்து நாட்கள் நிழலில் உலரவைத்து நிலத்தில் போடுவதன் மூலம் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
சூடோமோனாஸ் கரைசலை 60 மில்லி கேப்சூஸþலில் நிரப்பி வாழை கிழங்கில் துளையிட்டு, அதில் கேப்சூளை வைத்து களிம
நோய் தாக்கம் தீவிரமானால்:கார்பண்டாசிம் 0.2 சதம் அல்லது புரொபினோசோல் 0.1 சதம் என்ற பூஞ்சான கொல்லியை கன்று நடவான 5 மாதம் கழிந்து இருமாத இடைவெளியில் மரத்தைச் சுற்றி நீரில் கலந்து மண் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
வெடிவாழை அறிகுறி தென்பட்டால்…அனைத்து மரங்களுக்கும் கார்பண்டாசிம் 2 சதம் கரைசலை ஊசிமூலம் 3 மில்லி அளவில் கிழங்கில் செலுத்த வேண்டும்.
மருந்து கரைசலுக்குப் பதில், 60 மில்லி கார்பண்டாசிம் நிரப்பிய குப்பியை கிழங்கில் 7 மில்லிமீட்டர் துளையிட்டும் செலுத்தலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய பேராசிரியர்கள் க.மனோண்மணி, பா.உஷாராணி, இரா.அருண்குமார், செல்வி ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.