நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும்.
இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுக்கு வெட்டு காய்கறிகளில் காலிஃபிளவரில்தான் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. மேலும் ஒரு கப் காலிஃபிளவரில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.
எனவே இதனை தினமும் நாம் உணவாக எடுத்து கொண்டால் நம் உடல் அதிக ஆற்றல் பெற்றதாக திகழும் என்பதில் எவ்வித ஐயம் இல்லை.