fbpx
August 29, 2018 சின்ன வெங்காய ரசம்

சின்ன வெங்காய ரசம்

சின்ன வெங்காய ரசம்

Author ஆசிரியர்

Ingredients

  • 10 சின்ன வெங்காயம்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • 25 கிராம் துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • கடுகு – தாளிக்க தேவையான அளவு
  • 2 ஸ்பூன் மிளகு
  • 3 பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு – தேவையான அளவு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயதூள்
  • கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிதளவு
  • 2 ஸ்பூன் எண்ணைய்

Instructions

  • சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
  • தக்காளியை கையால் நன்கு மசித்து கொள்ளவும்..
  • துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  • மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
  • பின்பு புளியை நன்றாக கரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயம் மற்றும் மசித்த தக்காளியையும் சேர்க்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை வதக்கி அதில் ,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும். துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் நுரை பொங்கி வரும்போது கொத்தமல்லி தழையை துவி இறக்கவும்.
  • சுவையான சின்ன வெங்காய ரசம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!