கடாயை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு, நன்கு வறுத்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தாளித்துக் கொள்ளவும்.
பின் அதில் மிக்ஸியில் அரைத்த விழுது புளி தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு, வேக வைத்துள்ள கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.