கோங்கூரா தொக்கு
Ingredients
- புளிச்சக் கீரை – 2 கட்டு
- பச்சை மிளகாய் – 1
- காய்ந்த மிளகாய் – 6
- மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன்
- கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன்
- சீரகம், தனியா – 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை, கடுகு, உப்பு, காய்ந்தமிளகாய் – தேவையான அளவு
Instructions
- புளிச்சக் கீரையை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சீரகம், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
- மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், புளிச்சக் கீரை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மசாலா சேர்த்து சேர்த்து கலந்து பரிமாறவும்.