September 3, 2018 கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
ஆசிரியர்: ஆசிரியர்
தேவையான பொருட்கள்
  • கறிவேப்பிலை உருவியது – 3 கப்
  • உளுத்தம் பருப்பு – கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 20
  • புளி – எலுமிச்சை அளவு
  • வெல்லம் – ஒரு சிறு துண்டு
  • நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயதூள் - சிறிதளவு
செய்முறை
  1. கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.
  2. கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள்.
  3. எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0