fbpx
August 31, 2018 கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

Author ஆசிரியர்

Ingredients

  • 1 ஸ்பூன் கண்டந்திப்பிலி
  • 2 தக்காளி
  • 1/4 கப் வேக வைத்த பருப்பு
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் நெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • கொத்தமல்லி - சிறிதளவு

Instructions

  • மிளகு சீரகத்தை பொடித்து மிக்சியில் கொள்ளவும்.
  • கண்டந்திப்பிலியையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் கரைத்த புளிதண்ணீர் தக்காளி சேர்த்து மசித்து வேகவிடவும்.
  • அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் பொடித்த கண்டந்திப்பிலிப் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்
  • ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் கெட்டியாக இருக்கும்
  • ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
  • பின் சிறிய கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதை ரசத்தில் கலக்கி விடவும். இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!