fbpx
September 3, 2018 எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம்

Author ஆசிரியர்

Ingredients

  • எலுமிச்சை - 2
  • தக்காளி - 1
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1
  • மல்லிவிதை 1 ஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • காய்ந்த மிளகாய் - 1
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • கடுகு - அரை ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி -கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

Instructions

  • ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
  • பூண்டு , மிளகு ,சீரகம் ,மல்லி விதை ,காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளி கலவையை அதில் ஊற்றவும்.
  • அதனுடன் அரைத்த மசாலா ,மற்றும் பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து நுரைத்து பொங்கி வரும் போது எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி வைக்கவும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் இலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டவும் சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!