September 3, 2018 உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு
ஆசிரியர்: ஆசிரியர்
தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு - அரை கிலோ
  • கேரட் - கால் கிலோ
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி - 1 துண்டு
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • பெருங்காய தூள் - அரை ஸ்பூன்
  • புளி - 50 கிராம்
  • நல்லெண்ணெய் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  1. உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்து கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைத்து கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
  3. வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
  4. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை பொரிக்கவும்.பின் அதில் இஞ்சியையும், கேரட்டையும் சேர்க்கவும்.

  6. இதனுடன் கூட பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி அதனுடன் உப்பு சேர்த்து புளி கரைசலைக் கொட்டி நன்கு கொதிக்க விடவும்.
  7. கொதி வந்ததும் தீயைக் குறைத்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கினால் உருளைக்கிழங்கு கேரட் தொக்கு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0