இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவிக் கொள்ளவும். கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
இதில் அரைத்த விழுதைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
Good Idea with different taste. Will try and add my comment.