ஆந்திரா ஸ்டைல் ரசம்
Ingredients
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1/4 கப் புளிச்சாறு
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிதளவு கொத்தமல்லி
- 1 ஸ்பூன் எண்ணெய்
அரைப்பதற்கு
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மல்லி
- 2 காய்ந்த மிளகாய்
- 6 பல் பூண்டு
தாளிப்பதற்கு
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
Instructions
- முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி ரசத்தில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால் ஆந்திரா ஸ்டைல்ரசம் ரெடி
Summary
Recipe Name
ஆந்திரா ஸ்டைல் ரசம்
Published On
Average Rating
1 Review(s) Based on