fbpx
February 13, 2021 சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை

உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் சின்ன மால்டிஹைடு, யூஜினால், டேனின்கள், கௌமாரின்கள் மற்றும் தாவரப்பசைப் பொருட்கள் காணப்படுகின்றன. லவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது.

கிருமிகளுக்கு எதிரானது
பண்டைய இந்தியா மற்றும் ஐரோப்பாவில் குளிராக இருக்கும் நிலைகளில், வெப்பம் தரும் மருந்தாகப் பயன்பட்டது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன் சேர்ந்து மருந்துப் பொருளாக கொடுக்கப்பட்டது.

இத்தாவரத்தில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உடலுக்கு வெப்ப உணர்வை தரும். ஜீரணத்தினை ஊக்குவிக்கும். வலி குறைக்கும். வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
இது இரத்த ஓட்டத்தை தூண்ட வல்லது. குறிப்பாக கை விரல்களுக்கும். கால் கட்டை விரல்களுக்கும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். ஜீரணக்கோளாறுகள் மற்றும் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். அசைவ சமையலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சளி போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். தசைவலிகளை போக்க வல்லது. உடலின் வலு இன்மையினையும், நோயில் இருந்து குணப்பட்டு வரும் நிலையினையும் தெளிவாக்க உதவுகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்
தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.

லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது.

மூட்டுவலிக்கு மருந்து
தினமும் காலை உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் ஒரு வாரத்தில் மூட்டுவலி பிரச்சினை தீரும். ஒரு மாதத்தில் வலி முற்றிலும் தீர்ந்து சகஜமாக நடமாடலாம்.

இது கருப்பையினை தூண்டி மாதவிடாய் குருதிப் போக்கினை ஊக்குவிக்கும். இந்தியாவில் குழந்தை பிறந்த பிறகு, கருத்தடையாக உட்கொள்ளப்படுகிறது.

பட்டையின் வடிநீர், சாறு மற்றும் பொடி சாராயக்கரைசல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!