January 17, 2019 தோல்நோய்களை குணமாக்கும் குன்றுமணி

தோல்நோய்களை குணமாக்கும் குன்றுமணி

‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கறுக்காது ” என்று ஒரு பழமொழி உண்டு.

இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன.

விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக்,லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

தோல்நோய்கள்
இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

நரம்பு கோளறுகளை குணமாக்கும்
வேர் வலுவேற்றி, சிறுநீர்போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச்செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறுகளுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்றுவிப்பது, விதைகளின் பசை மேல்பூச்சாக தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்கவாதத்தில் பயன்படுகிறது.

முடி வளர குன்றிமணி
கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும் என்பது சித்தர் பாடல்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்

நச்சுத்தன்மை
நவீன ஆய்வுகளில் விதைகளின் உறைச்சத்து விந்துக்களின் உற்பத்தியை குறைப்பதுடன் அவற்றின் கருவளத்தினையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அபிரின் மிகக் கடுமையான நச்சாகும்.

அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினர் விதைகளை வேகவைத்து உணவாக உட்கொள்வதாகத் தெரிகிறது. வேகவைக்கும் போது நச்சு முறிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!