இனிப்புத் துளசி (Stevia)
ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.
இனிப்புத் துளசியின் முக்கியத்துவம்:
மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே ஆகும். கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளைக் கொண்டுள்ளதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
இனிப்புத் துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:
இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.
இனிப்புத் துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:
- இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.
- இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
- ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
- சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
- இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.
துளசி என்றால் எல்லாருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மிக மகத்துவமும் உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எல்லார் வீட்டிலும் இருக்கவேண்டிய செடிகளுள் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனைக் கவனமாகப் பராமரிப்பது அவசியம்.
எளிதாகக் கிடைக்கும் இந்தத் துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில…
- ஆரோக்கியமான மனிதன் துளசி இலையைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
- ஜீரண சக்தியையும் புத்துணர்ச்சியையும் துளசி இலைமூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாகத் துளசியை உட்கொள்ளலாம்.
- துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. கோடை காலம் வரப் போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க என்பார்கள் அருகிலிருப்போர்.
- தோலில் பல நாள்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
- சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று தின்னலாம். தொடர்ந்து இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும்.
- சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொள்ளவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்குத் தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
- முழுமையான ஆரோக்கியத்திற்கு உகந்த, முற்றிலும் இயற்கையான துளசி இலை சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டு, உடல் நலத்திற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இயற்கையான சர்க்கரை 100 சதவிகிதம் இந்த இனிப்பு துளிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது .
Thanks : sithanmathi.blogspot