fbpx
January 17, 2019 கொளுத்துது வெயில் – பத்திரம் தோல்

கொளுத்துது வெயில் – பத்திரம் தோல்

கத்திரி வெயிலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் சூடு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு தோல் நோய்களும் ஏற்படுவது இயல்பு.

காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்களும், கட்டிகளும் ஏற்படுகின்றன. இது நாளைடைவில் தோல் புற்று நோயாகவும் மாற வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தோல் நோயில் இருந்து தப்பிக்க :
– பருத்தி ஆடைகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும்.

– புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

– பணி நிமித்தமாக வெளியில் செல்ல நேர்ந்தால் கையுறைகளை அணிந்து செல்லலாம். இது வெப்பத்தின் நேரடித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

– மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்களை உபயோகிக்கலாம். வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கிரீம்களை உபயோகிப்பதோடு, உதட்டிற்கு தேவையான தனிப்பட்ட கிரீம்களை உபயோகிக்க வேண்டும்.

சத்தான உணவுகள்:
– கோடைக்கு ஏற்ற உணவுமுறைகளை உண்ண வேண்டும். – பச்சைக் காய்கறிகள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்களை உண்ண வேண்டும்.

– மோர், இளநீர், பானங்களுடன், நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

– இவற்றை தவிர டீ, காஃபி, மது பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

– வெப்பம் அதிகமாக உள்ள சமயங்களில் மஞ்சள் பூசிச்செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, போன்றவற்றையும் குறைத்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!