fbpx
September 3, 2018 உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

Author ஆசிரியர்

Ingredients

  • உருளைக்கிழங்கு - அரை கிலோ
  • கேரட் - கால் கிலோ
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி - 1 துண்டு
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • பெருங்காய தூள் - அரை ஸ்பூன்
  • புளி - 50 கிராம்
  • நல்லெண்ணெய் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  • உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்து கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைத்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
  • வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
  • புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை பொரிக்கவும்.பின் அதில் இஞ்சியையும், கேரட்டையும் சேர்க்கவும்.
  • இதனுடன் கூட பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி அதனுடன் உப்பு சேர்த்து புளி கரைசலைக் கொட்டி நன்கு கொதிக்க விடவும்.
  • கொதி வந்ததும் தீயைக் குறைத்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கினால் உருளைக்கிழங்கு கேரட் தொக்கு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *






error: Content is protected !!
0
Open chat