இஞ்சி தொக்கு
Ingredients
- இஞ்சி – 1 /4 கிலோ
- பச்சை மிளகாய் – 50 கிராம்
- புளி – 100 கிராம்
- வெல்லம் – சிறு துண்டு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் –தேவையான அளவு
தாளிக்க
- கடுகு – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – 1 ஸ்பூன்
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – 3 ஸ்பூன்
Instructions
- இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவிக் கொள்ளவும். கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- இதில் அரைத்த விழுதைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
Good Idea with different taste. Will try and add my comment.